GTA-வில் கனமழை, அடர்ந்த பனி மூட்டம்! Near-Zero Visibility!

Greater Toronto Area-வின் பெரும்பாலான பகுதிகளில் கனமழையுடன் அடர்ந்த பனி மூட்டமும் நிலவக்கூடும் என Environment Canada எச்சரிக்கை விடுத்துள்ளது.

Toronto, Markham, Richmond Hill, Vaughan, Mississauga, Brampton, Pickering, Oshawa உள்ளிட்ட பல பகுதிகளுக்கு Fog Advisory அறிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் பனி மூட்டம் மிகவும் அடர்த்தியாக இருப்பதால், வீதிகளில் காணும்திறன் கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக குறையக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் வேகத்தை குறைத்து, வாகனங்களுக்கு இடையில் போதுமான இடைவெளியை வைத்துக்கொள்வதுடன், பயணத்திற்கு கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் GTA-வின் பல பகுதிகளில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

சில பகுதிகளில் 20 முதல் 40 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் இதைவிட அதிகமான மழையும் பதிவாகலாம்.

இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதற்கும், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஆறுகள், நீரோடைகள், கரையோரப் பகுதிகளில் நீர்மட்டம் வேகமாக அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் அந்தப் பகுதிகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles