GO Transit மற்றும் UP Express சேவைகளில் பயணக் கட்டணம் செலுத்தாமல் பயணிப்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதங்கள் கணிசமாக அதிகரிக்கப்படுகின்றன.
செப்டம்பர் 8 முதல் புதிய அபராத முறை நடைமுறைக்கு வருகிறது என Metrolinx அறிவித்துள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, செல்லுபடியாகும் பயணச்சீட்டு அல்லது கட்டணம் செலுத்தியதற்கான ஆதாரம் இல்லாமல் பிடிபட்டால்,
முதல் முறை – $200 அபராதம்.
இரண்டாவது முறை – $300.
மூன்றாவது முறை – $400.
நான்காவது முறை – $500 அபராதம்.
ஐந்தாவது முறையாக மீறுபவர்களுக்கு Provincial Offence Notice வழங்கப்படும். ஆறாவது முறை அல்லது அதற்கு மேல் தொடர்ச்சியாக விதிமுறைகளை மீறுபவர்கள் நீதிமன்ற அழைப்பாணையை எதிர்கொள்ள நேரிடலாம்; குற்றம் நிரூபிக்கப்பட்டால் $1,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
இதற்கு முன்பு முதல் முறையாக கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்து பிடிபடுபவர்களுக்கு $35 அபராதமே விதிக்கப்பட்டது. இரண்டாவது முறைக்கு $50 மற்றும் மூன்றாவது முறைக்கு $100 என்ற அளவில் இருந்த அபராதங்கள் தற்போது பல மடங்கு உயர்த்தப்படுகின்றன.
பயணிகள் ரயில் அல்லது பேருந்தில் ஏறுவதற்கு முன்னர் PRESTO, Credit Card அல்லது Debit Card மூலம் கட்டணம் செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும்.
செப்டம்பர் 8 முதல் GO Transit-இல் கட்டணம் செலுத்தாமல் பயணிப்பது, இனி மிகவும் விலை உயர்ந்த தவறாக மாறப்போகிறது.
