Alberta மாகாண பிரிவினை வாக்கெடுப்பில் கனடாவுடன் இணைந்திருக்க வாக்களித்த வெற்றியை Forever Canadian இயக்கத்தின் ஆதரவாளர்கள் Edmonton நகரில் கோலாகலமாகக் கொண்டாடினர்.
நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகக் கருதப்பட்டாலும், மாகாண மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் ஒட்டாவா (Ottawa) மீதான அதிருப்திகள் தீர்க்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள அமைப்பின் தொண்டர்கள், கனடாவிற்குள் மாகாணத்தின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம் எனக் கூறியுள்ளனர்.
குறிப்பாக, Let Alberta Decide இயக்கத்தின் தலைவர் Keith Wilson மற்றும் Alberta Prosperity Project தலைவர் Mitch Sylvestre போன்ற பிரிவினைவாத தலைவர்கள், வாக்கெடுப்பு முடிந்தாலும் Albertaவின் உரிமைகள் மற்றும் எதிர்காலம் குறித்த விவாதங்கள் தொடரும் எனக் கூறியுள்ளனர்.
பிரதமர் Mark Carney மற்றும் பல தலைவர்களும் இந்த ஒருமைப்பாட்டை வரவேற்றுள்ள நிலையில், அடிமட்ட அளவில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் நாட்டின் எதிர்கால அரசியலில் தொடர்ந்தும் தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
