உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்க இன்னும் 50 நாட்களே உள்ள நிலையில், FIFA வெளியிட்ட ‘கடைசி நேர டிக்கெட் விற்பனை‘ (Last-minute sale) ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 22 அன்று இணையத்தில் வெளியான டிக்கெட்டுகளை வாங்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முயன்றனர்.
ஆனால், “Queue” எனப்படும் இணைய வரிசையில் பல மணிநேரம் காத்திருந்தும் பலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.
நான்கு மணிநேரத்திற்கு மேலாகியும் வரிசை நகரவில்லை என ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
FIFA திட்டமிட்டே டிக்கெட்டுகளைப் பல கட்டங்களாகப் பிரித்து விற்பனை செய்வதன் மூலம், ஒரு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை உயர்த்துவதாக கால்பந்து ஆய்வாளர் ராப் பீல்டர் (Rob Fielder) குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகரில் நடைபெறும் அமெரிக்க அணியின் முதல் போட்டிக்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்பனையாகவில்லை என ‘தி அத்லெடிக்‘ (The Athletic) அறிக்கை கூறுகிறது.
70,000 பேர் அமரக்கூடிய மைதானத்தில் சுமார் 40,000 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.
அதிகப்படியான விலை மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற விற்பனை முறை காரணமாக, தீவிர கால்பந்து ரசிகர்கள் பலரும் இந்த முறை உலகக்கோப்பை டிக்கெட் நடைமுறையை “சினிகள்” (Cynical) என்று விமர்சித்து வருகின்றனர்.










