FIFA உலகக்கிண்ண மைதானங்களில் உவுசேலாக்களுக்கு (Vuvuzelas) தடை – உடல் வர்ணம் ஆடையாகாது என அறிவிப்பு!

கனடா (Canada), அமெரிக்கா (United States) மற்றும் மெக்ஸிகோ (Mexico) ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள 2026 FIFA உலகக்கிண்ணக் காற்பந்து தொடருக்கான மைதான நடத்தை விதிகளை FIFA அமைப்பானது வெளியிட்டுள்ளது.

இதன்படி, கடந்த 2010 தென்னாப்பிரிக்க உலகக்கிண்ணத் தொடரில் உலகப் புகழ்பெற்ற பிளாஸ்டிக் ஊதுகுழலான வுவுசேலாக்களுக்கு (Vuvuzelas) இந்தத் தொடரில் முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விசில்கள், ஏர் ஹார்ன்கள் மற்றும் 12 சென்டிமீட்டருக்கும் அதிகமான அளவுடைய இசைக்கருவிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், மைதானங்களில் ரசிகர்கள் ஆடையின்றி ஓடுவது அல்லது உடலின் அந்தரங்கப் பகுதிகளை வெளிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.ஞ

அத்துடன், “உடலில் வரையப்படும் வர்ணங்கள் (Body paint) அல்லது பச்சை குத்துதல்கள் (Tattoos) ஆடைகளாகக் கருதப்பட மாட்டாது” என்றும் FIFA தெளிவுபடுத்தியுள்ளது.

இவ்விதிமுறைகளை மீறுபவர்கள் மைதானத்தை விட்டு வெளியேற்றப்படுவதுடன், அவர்களின் நுழைவுச்சீட்டுகளும் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

48 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் ஜூன் 11 அன்று ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles