பெண்ணை மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகன சாரதி

பெண்ணை மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகன சாரதி! வலைவீசும் பொலிசார்! எடொபிகோவில் சம்பவம்!

டொராண்டோ எடொபிகோவில் பெண் பாதசாரி ஒருவரை மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகன ஓட்டுநரை பொலிசார் தேடி வருகின்றனர்.

நேற்றிரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

30 வயதுடைய பெண் பாதசாரி ஒருவரே காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதேநேரம், கடந்த மாதம் எடொபிகோவில் நடைபெற்ற மற்றொரு விபத்துச் சம்பவத்தில் ஆண் பாதசாரியொருவரை மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகனத்தை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.

அந்த சம்பவம் ஏப்ரல் 27-ஆம் திகதி அதிகாலை 2:30 மணிக்கு நடந்துள்ளது.

வெள்ளை நிறத்திலான கார் ஒன்று குறித்த நபரை மோதியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த வாகனத்தை கண்டுபிடிக்க, அப்பகுதி மக்களும் டாஷ்கேம் வீடியோ உள்ள வாகன சாரதிகளும் உதவ வேண்டும் என்று பொலிசார் கோரியுள்ளனர்.

தகவல் வழங்க விரும்புவோர், டொராண்டோ போக்குவரத்து விசாரணை பிரிவைத் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

Etobicoke, Hit and Run, Toronto Police, Canada News, Traffic Accident, Pedestrian Injury #Etobicoke #HitAndRun #TorontoPolice #TrafficUpdate #BreakingNews #CanadaNews

Related Articles

Latest Articles