E-Bike, E-Scooter பயணிகளுக்கு எச்சரிக்கை – Bike Lane-ஐ மறித்தால் Ticket!

Toronto நகரில் e-bike, e-scooter உள்ளிட்ட சிறிய மின்சார போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்துவோர் மீது Toronto Police மேற்கொண்ட இரண்டு வார சிறப்பு நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான tickets மற்றும் warnings வழங்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 10 முதல் 24 வரை நகரம் முழுவதும் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த இரண்டு வார காலப்பகுதியில் e-bike, e-scooter, e-moped உள்ளிட்ட சாதனங்கள் தொடர்பான விதிமீறல்களுக்காக மொத்தம் 324 tickets மற்றும் warnings வழங்கப்பட்டதாக Toronto Police தெரிவித்துள்ளது.

நடைபாதைகளில் சட்டவிரோதமாக பயணித்தல், cycle track-களில் எதிர்திசையில் பயணித்தல், அனுமதிக்கப்படாத e-moped-களை bike lane-களில் பயன்படுத்துதல் உள்ளிட்ட விதிமீறல்கள் இதில் அடங்குகின்றன.

அதேவேளை, bike lane-களை மறித்து வாகனங்களை நிறுத்திய சாரதிகளுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வாரங்களில் மட்டும் bike lane-களில் வாகனங்களை நிறுத்தியதற்காக 1,277 parking tickets வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, Toronto நகரின் பொது இடங்களில் e-scooter-களை இயக்குவதற்கு அனுமதி இல்லை என்பதையும் Toronto Police மீண்டும் நினைவூட்டியுள்ளது.

இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கம் தண்டனை வழங்குவது மட்டுமல்லாமல், e-bike உள்ளிட்ட சாதனங்களை பாதுகாப்பாகவும் சட்டபூர்வமாகவும் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

எனினும், இந்த இரண்டு வார சிறப்பு நடவடிக்கை முடிவடைந்தாலும், விதிகளை மீறும் micro-mobility பயணிகள் மீது நகரம் முழுவதும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் Toronto Police எச்சரித்துள்ளது.

Related Articles

Latest Articles