23 நிறுவனங்களை சந்தித்த Carney! வர்த்தகப் போருக்கு தயாராகிறதா Canada?

கனடா–அமெரிக்கா இடையிலான வர்த்தக பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் Mark Carney முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளார்.

வங்கி, எரிசக்தி, தொலைத்தொடர்பு, போக்குவரத்து, உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 23 நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்காவுடனான வர்த்தக உறவில் ஏற்பட்டுள்ள அண்மைய மாற்றங்கள், அவற்றால் கனேடிய நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நாட்டிற்குள் புதிய முதலீடுகளையும் பொருளாதார வளர்ச்சியையும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ஒவ்வொரு துறையையும் பிரதிநிதித்துவப்படுத்திய தொழில் தலைவர்களிடமிருந்து தற்போதைய வர்த்தக சூழ்நிலை குறித்த கருத்துகளையும் பிரதமர் கேட்டறிந்துள்ளார்.

அமெரிக்கா கனடா இடையே புதிய வரி காரணமாக பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க நிதியமைச்சர் Scott Bessent, “கனடாவுடன் நாங்கள் போரில் இல்லை” என்று தெரிவித்துள்ள போதிலும், வர்த்தக விவகாரத்தை அரசியல் மோதலாக மாற்றியுள்ளதாக கனடா பிரதமர் Carney மீது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மறுபுறம், அமெரிக்காவை மட்டும் சார்ந்திருக்காத வலுவான கனேடிய பொருளாதாரத்தை உருவாக்குவதும், புதிய சர்வதேச முதலீடுகளை கனடாவிற்கு கொண்டுவருவதும் தனது அரசின் முக்கிய இலக்கு என Carney வலியுறுத்தி வருகிறார்.

Related Articles

Latest Articles