Brampton-ஐ சேர்ந்த முன்னாள் வழக்கறிஞர் ஒருவர், சுமார் 4.3 மில்லியன் டொலர் mortgage மற்றும் cheque fraud தொடர்பாக Peel Regional Police-னால் கைது செய்யப்பட்டுள்ளார்.
52 வயதான Pawanjeet Singh Mann என்பவர், PJ Mann Law Professional Corporation என்ற சட்ட நிறுவனத்தை நடத்தி வந்தவர்.
2019ஆம் ஆண்டில் இடம்பெற்ற mortgage fraud திட்டம் ஒன்றில் அவர் தெரிந்தே பங்கேற்றதாக 2025 ஜூலை மாதம் Law Society Tribunal கண்டறிந்ததைத் தொடர்ந்து, அவரது வழக்கறிஞர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையில் 2025 ஜூன் ஜூலை மாதங்களில் Mann தொடர்பாக பல மோசடி புகார்கள் கிடைத்ததாக Peel Police தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், நான்கு தனித்தனி mortgage மற்றும் cheque fraud திட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 4.3 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டதாக போலீசார் குற்றஞ்சாட்டுகின்றனர்.
August 21ஆம் திகதி Mann கைது செய்யப்பட்டு, $5,000-க்கும் அதிகமான fraud தொடர்பாக நான்கு குற்றச்சாட்டுகள், குற்றத்தின் மூலம் பெறப்பட்ட சொத்தை வைத்திருந்ததாக நான்கு குற்றச்சாட்டுகள், criminal breach of trust தொடர்பாக மூன்று குற்றச்சாட்டுகள் மற்றும் forged documents பயன்படுத்தியதாக இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Mann-னால் தாங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நினைப்பவர்கள் Peel பொலிசாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.










