Donald Trump இன் அதிரடி உத்தரவு:’Lake Ontario’வை ‘Lake America’ என மாற்றியது Apple Maps செயலி!

அமெரிக்க அதிபர் Donald Trump பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, Apple நிறுவனம் தனது Apple Maps செயலியின் இணைய பதிப்பில் ‘Lake Ontario’ ஏரியின் பெயரை ‘Lake America’ என மாற்றியுள்ளது.

முன்னதாக Google Maps நிறுவனமும் அமெரிக்க பயனர்களுக்கு இந்த பெயர் மாற்றத்தை அமல்படுத்தியிருந்தது.

அமெரிக்க உள்நாட்டுப் புவியியல் அமைப்பின் (U.S. Geographic Names Information System) அதிகாரப்பூர்வ மாற்றத்தைத் தொடர்ந்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக Apple தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த பெயர் மாற்றம் அமெரிக்க பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும். கனடா (Canada) வாழ் பயனர்களுக்கு தொடர்ந்து ‘Lake Ontario’ என்றே காண்பிக்கப்படும்.

முன்னதாக ‘Gulf of Mexico’ கடற்பகுதியை ‘Gulf of America’ என Donald Trump மாற்றியபோதும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இதே அணுகுமுறையையே பின்பற்றின.

400 ஆண்டுகள் பழமையான இந்தப் பெயரை மாற்றப்போவதில்லை என கனடா பிரதமர் Mark Carney மற்றும் New York ஆளுநர் Kathy Hochul ஆகியோர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles