Client மீது பாலியல் தாக்குதல்? Toronto Masseur மீது குற்றச்சாட்டு

Toronto Chinatown-ல் மசாஜ் சேவை பெற்றவருக்கு பாலியல் தாக்குதல் செய்ததாக மசாஜ் தெரபிஸ்ட் ஒருவரை Toronto Police கைது செய்துள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி, Spadina Avenue மற்றும் Dundas Street West சந்திப்புக்கு அருகிலுள்ள பகுதியில் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணையின் அடிப்படையில் Toronto-வைச் சேர்ந்த 53 வயதான Jiquan Liu என்பவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு, பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கக்கூடும் என சந்தேகிக்கும் பொலிசார் குற்றம் சுமத்தப்பட்ட நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். 

இந்த நபர் அல்லது சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் பொலிசாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles