கனடா மீது அமெரிக்க அதிபர் Donald Trump மீண்டும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை தனது Truth Social பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவிட்ட Trump, அமெரிக்காவை வர்த்தக ரீதியாக மோசமாக பயன்படுத்திக் கொண்ட நாடுகளில் கனடாவும் ஒன்று என குற்றஞ்சாட்டினார்.
“Canadian cars வேண்டாம்… Canadian parts வேண்டாம்… Canadian எதுவுமே எனக்கு வேண்டாம்” என்று தெரிவித்த Trump, பல தசாப்தங்களாக கனடா அமெரிக்காவை பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
தனது வரிக் கொள்கைகளின் காரணமாகவே அமெரிக்காவின் automobile industry மீண்டும் வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் Trump கூறுகிறார்.
அதோடு, அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் கனடிய நிறுவனங்கள் உடனடியாக தங்களது செயல்பாடுகளை அமெரிக்காவுக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அவ்வாறு அமெரிக்காவுக்கு இடம்பெயரும் நிறுவனங்கள் வரி செலுத்த வேண்டியதில்லை என்றும் Trump தெரிவித்துள்ளார்.
மேலும், கனடாவுடனான வர்த்தகத்தில் அமெரிக்கா ஆண்டுதோறும் 60 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக இழப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக எரிசக்தி மற்றும் வாகன உற்பத்தித் துறைகளை மையமாகக் கொண்டு Canada – U.S. இடையிலான வர்த்தக பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வரி தொடர்பான இரு நாடுகளின் மோதல் ஏற்கனவே வணிக நிறுவனங்களையும் வாடிக்கையாளர்களையும் பாதிக்கத் தொடங்கியுள்ள நிலையில்,
“Canadian anything வேண்டாம்” என்ற Trump-ன் புதிய கருத்து, Canada – U.S. உறவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்துமா என்பது தற்போது முக்கிய கேள்வியாகியுள்ளது.










