Canada’s Wonderland இல் இரண்டு முக்கிய Roller Coasterகள் திடீர் மூடல்! காரணம் என்ன?

cp24

கனடாவின் பிரபலமான பொழுதுபோக்கு பூங்காவான Canada’s Wonderlandஇல், இரண்டு முக்கியமான Roller Coasterகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் உள்ள Six Flags பொழுதுபோக்கு பூங்காவில் இடம்பெற்ற உயிரிழப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை, அட்லாண்டா நகருக்கு அருகிலுள்ள Six Flags Over Georgia பூங்காவில் இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் தொடர்பாக பொலிஸாரின் முக்கிய குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஒன்ராறியோவின் Vaughan நகரில் அமைந்துள்ள Canada’s Wonderland பூங்காவில், மிகவும் பிரபலமான Behemoth மற்றும் Leviathan ஆகிய இரண்டு Roller Coasterகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கே தாங்கள் அதிக முக்கியத்துவம் வழங்குவதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இதுபோன்ற விளையாட்டு சாதனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் பூங்காவின் பேச்சாளர் Grace Peacock தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு Roller Coasterகளும் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது தொடர்பில் இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.

Canada’s Wonderland செல்லத் திட்டமிட்டிருப்பவர்கள், பயணத்திற்கு முன்னர் பூங்காவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் புதிய அறிவிப்புகளைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Previous articleகனடாவில் Heating Bill ஆயிரக்கணக்கான டொலர்களைத் தாண்டி உயரும் அபாயம்!
Next articleரொரன்ரோ தேர்தலில் வாக்காளர்கள் புதிய சாதனை! முன்கூட்டியே 2.22 இலட்சம் பேர் வாக்களிப்பு!