கனடா – அமெரிக்கா இடையே அதிகரித்து வரும் பதற்றம் குறித்து உக்ரேன் அதிபர் Volodymyr Zelenskyy முக்கிய கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
இரு அண்டை நாடுகளுக்கு இடையே தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை “விசித்திரமாகவும் ஆபத்தானதாகவும்” இருப்பதாக Zelenskyy தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கனடாவை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்வது தொடர்பாக அமெரிக்க அதிபர் முன்வைத்த கருத்துகள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஆபத்தானவை என்றும் அவர் கூறியுள்ளார்.
“அண்டை நாடுகளுக்கு இடையே பிரச்சினைகள் உருவாவது மிகவும் ஆபத்தானது. உக்ரேன் மற்றும் ரஷ்யா அதற்கு ஒரு உதாரணம்” என்று Zelenskyy தெரிவித்துள்ளார்.
ஆனால் கனடா-அமெரிக்கா நிலைமையையும் உக்ரேன்-ரஷ்யா போர் நிலைமையையும் ஒன்றாக ஒப்பிட முடியாது.
எனினும், கனடா, அமெரிக்கா இரண்டும் தங்களுக்கிடையிலான பிரச்சினைகளை ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என Zelenskyy வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் கருத்துகள் Zelenskyy-யின் கனடா பயணத்தின் முடிவில் வெளியாகியுள்ளன.
இந்தப் பயணத்தின்போது கனடா மற்றும் உக்ரேன் இடையே 100 ஆண்டுகளுக்கான புதிய strategic partnership கையெழுத்தானது.
Defence, security, trade, energy, drone production உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளும் நீண்டகாலம் இணைந்து செயல்பட இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.
