‘கோல்டன் டோம்’ ஏவுகணை தடுப்புப் பாதுகாப்பு திட்டத்தில் கனடா இணைவது குறித்து அமெரிக்காவுடன் உயர் மட்ட பேச்சுவார்த்தை
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய ‘Golden Dome’ ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தில் கனடா இணைந்துகொள்ளும் வாய்ப்பு இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதுகுறித்து அமெரிக்காவுடன் உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், எனினும் கனடா எந்த அளவிற்கு முதலீடு செய்யும் என்பது இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
“இது ராணுவ சம்பந்தமான முக்கிய முடிவாக இருப்பதால் நாங்கள் கவனமாக அணுகுகிறோம்” என கார்னி கூறினார்.
விரைவில் விண்வெளியிலிருந்து ஏவுகணைகள் தாக்கும் அபாயம் இருக்கக்கூடும் என்று எச்சரித்துள்ள கார்னி, எனவே இது முக்கியமான திட்டம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,, கடந்த 20 ஆண்டுகளாக இந்த பிரச்சினையில் கனடா ஒரு முடிவே எடுக்காமல் உள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர் டேவிட் பேரி விமர்சித்துள்ளார்.
ட்ரம்ப்பின் இந்தத் திட்டத்தில் இணைந்து, அமெரிக்காவுடன் வர்த்தக சர்வதேச உறவுகளை மேம்படுத்தவும், சிக்கலான பிரச்சினைகளை சமாளிக்கவும் இது ஒரு வாய்ப்பாக இருக்கலாம் என அமெரிக்காவிற்கான முன்னாள் கனடா தூதுவர் ஃபிராங்க் மெக்கென்னா தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தற்போது $175 பில்லியன் பெறுமதியுள்ள இந்த திட்டத்திற்கான முதலீட்டைப் பகிர்ந்து கொள்ள கனடா முன்வந்துள்ளதாகவும், எனினும், இதில் எவ்வளவு முதலீடு செய்வது ன்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
#Canada #GoldenDome #MissileDefence #USCanadaRelations #MarkCarney #Trump #Norad #DefenceNews