CANADA–EU Energy Deal: என்ன மாறப்போகிறது?

கனடா பிரதமர் Mark Carney-யின் ஐரோப்பிய பயணத்தைத் தொடர்ந்து, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே energy security தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. Energy security, critical minerals உள்ளிட்ட துறைகளில் ஆழமான ஒத்துழைப்பை Carney முன்வைத்துள்ளார்.

ஆனால் இதன் பொருள் கனடாவிலிருந்து எண்ணெய் மற்றும் LNG கப்பல்கள் உடனடியாக ஐரோப்பாவுக்கு செல்லப்போகின்றன என்பதல்ல.

கனடாவின் West Coast-ல் ஆசியாவுக்கு எண்ணை மற்றும் எரிவாயு ஏற்றுமதி செய்ய கட்டமைப்பு உள்ளது. ஆனால் ஐரோப்பாவுக்கு நேரடியாக பெருமளவில் ஏற்றுமதி செய்யக்கூடிய கட்டமைப்பு தற்போது இல்லை. அத்தகைய புதிய திட்டங்களை உருவாக்க பல ஆண்டுகள் ஆகக்கூடும் என கூறப்படுகிறது. 

அப்படியானால் Canada-விலிருந்து ஆசியாவுக்கு செல்லும் gas cargo ஒன்றை, மற்றொரு விநியோகத்தரின் ஐரோப்பா நோக்கிய cargo-வுடன் வணிக ஒப்பந்தத்தின் மூலம் மாற்றிக்கொள்ள முடியும். 

அதேநேரம், இன்னொரு முக்கிய வாய்ப்பு critical minerals.

Batteries, electric vehicles, renewable-energy technologies உள்ளிட்டவற்றுக்கு தேவையான கனிமங்களை Canada ஐரோப்பாவுக்கு வழங்குவதன் மூலம், Europe தனது clean-energy supply chain-ஐ வலுப்படுத்த முடியும் என Clean Energy Canada தெரிவித்துள்ளது.

எனவே Canada–EU Energy Alliance என்பது oil மற்றும் gas மட்டும் அல்ல — natural gas, critical minerals, hydrogen மற்றும் clean energy ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பரந்த கூட்டாண்மையாக உருவாகக்கூடும்.

Related Articles

Latest Articles