Canada-வில் இருந்து Alberta பிரிய வேண்டுமா என்ற விவாதம் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் Mark Carney, Alberta Canada-வில் தொடர்ந்து இருக்க வேண்டும் என பிரசாரம் செய்து வரும் Forever Canadian அமைப்பினரை சந்தித்துள்ளார்.
Alberta-வின் Banff பகுதியில் நடைபெற்ற federal cabinet retreat-ன் இறுதி நாளில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
Forever Canadian அமைப்பு பயன்படுத்தி வரும் வாகனத்தில், Canada அனைவரையும் உள்ளடக்கியது; அனைவருக்குமானது என்று Carney தனது கையால் எழுதினார்.
October 19 அன்று Alberta-வில் முக்கிய வாக்கெடுப்பொன்று நடைபெறவுள்ளது.
அதில், Alberta Canada-வின் ஒரு மாகாணமாக தொடர்ந்து இருக்க வேண்டுமா, அல்லது எதிர்காலத்தில் Alberta பிரிவது தொடர்பான கட்டாய பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கான சட்ட நடவடிக்கையை அரசு தொடங்க வேண்டுமா என்று மக்களிடம் கேட்கப்படவுள்ளது.
“Canada is worth fighting for” என்று கூறியுள்ள Carney, Albertans அனைவரும் October 19 வாக்கெடுப்பில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Albertans எப்படி வாக்களிக்க வேண்டும் என்று கட்டளையிடுவது தனது பணி அல்ல என்றும், Alberta-வுடன் வலுவான கூட்டாளியாக செயல்பட்டு Canada முழுவதையும் ஒன்றிணைப்பதே தனது நோக்கம் என்று Federal government தெரிவித்துள்ளது.
October 19 வாக்கெடுப்பு, Alberta–Canada உறவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான அரசியல் தருணமாக பார்க்கப்படுகிறது.
