கனடாவுக்கு $1 டிரில்லியன் முதலீடு! முதலீட்டாளர்களை Torontoவில் களமிறக்கிய Carney

கனடாவுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு டிரில்லியன் கனடிய டொலர் முதலீட்டை கொண்டு வர வேண்டும் என்ற மிகப்பெரிய இலக்குடன் பிரதமர் Mark Carney, உலகின் முன்னணி முதலீட்டாளர்களை Torontoவில் சந்தித்து வருகிறார்.

செப்டம்பர் 14 – 15ஆம் திகதிகளில் நடைபெறும் முதலாவது Canada Investment Summit இல் உலகின் மிகப்பெரிய investment firms, pension funds, sovereign wealth funds-ஐ சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள்.

இந்த மாநாட்டில் முதலீட்டாளர்களுக்கு 167 கனடிய திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன.

Mining, critical minerals, conventional energy, ports, transportation, advanced manufacturing, artificial intelligence, digital technology உள்ளிட்ட துறைகள் இதில் இடம்பெற்றுள்ளன.

இதில் புதிய West Coast oil pipeline, Port of Churchill விரிவாக்கம் மற்றும் British Columbia LNG திட்டங்கள் போன்ற பல பில்லியன் டொலர் திட்டங்களும் அடங்குகின்றன.

ஆனால் முதலீட்டைப் பெறுவதற்கு திட்டங்களை காட்டுவது மட்டும் போதாது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

பெரிய திட்டங்களுக்கு அனுமதி பெறும் காலத்தை குறைத்தல், regulatory uncertainty-ஐ நீக்குதல் மற்றும் திட்டங்களை விரைவாக முடிக்க முடியும் என்பதை கனடா நிரூபிப்பது முக்கியமாகிறது.

குறிப்பாக Canada–U.S. வர்த்தக உறவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவை மட்டும் சார்ந்திருக்காமல் உலகளாவிய முதலீட்டு உறவுகளை விரிவுபடுத்த Carney அரசு முயற்சிக்கிறது.

அதேநேரம் வெளிநாட்டு முதலீட்டால் கனடிய வளங்கள் மற்றும் முக்கிய infrastructure மீதான கட்டுப்பாடு பாதிக்கப்படுமா என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.

எனவே புதிய ஒப்பந்தங்களில் கனடாவின் இறையாண்மை பாதுகாக்கப்படுவதுடன், அவற்றின் நிபந்தனைகளும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதும் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Articles

Latest Articles