Buy Canadian அலை தீவிரம் – மாறும் Supermarkets!

கனடாவில் அமெரிக்க பொருட்களை தவிர்த்து, கனடிய தயாரிப்புகளை வாங்க வேண்டும் என்ற Buy Canadian மனநிலை மீண்டும் தீவிரமடைந்து வருகிறது.

கனடா–அமெரிக்கா இடையிலான வர்த்தக மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், தாங்கள் செலவிடும் பணம் எந்த நாட்டின் பொருட்களுக்கு செல்கிறது என்பதில் கனடியர்கள் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

இதனால் கனடாவின் பல Supermarket-களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

Ontario-வில் இயங்கும் Vince’s Market கடைகளில் தற்போது விற்பனை செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் சுமார் 90 சதவீதம் கனடிய தயாரிப்புகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட Strawberry-களுக்கு பதிலாக Quebec-இல் இருந்து வாங்கவும் அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது.

கனடாவின் மிகப்பெரிய grocery retailer ஆன Loblaw, கனடிய பொருட்களை வாடிக்கையாளர்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில் Maple Leaf அடையாளங்களை மீண்டும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

Metro நிறுவனமும் தற்போதைய சூழ்நிலையில் உள்ளூர் கனடிய தயாரிப்புகளுக்கு முன்னுரிமை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

அதேவேளை, சில grocery stores அமெரிக்காவுக்கு பதிலாக Spain, Brazil, Honduras உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பொருட்களை வாங்கத் தொடங்கியுள்ளன.

இருப்பினும், கனடாவின் கடுமையான குளிர்காலம் காரணமாக ஆண்டு முழுவதும் உள்ளூரில் பழங்கள் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்வது சவாலாக உள்ளது.

இதனை சமாளிக்க அடுத்த 10 ஆண்டுகளில் Greenhouse உற்பத்தியை அதிகரிக்க சுமார் 3 பில்லியன் கனடிய டொலர்களை முதலீடு செய்ய கனடிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வர்த்தகப் பிரச்சினைகள் எதிர்காலத்தில் குறைந்தாலும், கனடியர்கள் பொருட்களின் Country of Origin-ஐ கவனிக்கும் பழக்கம் நீண்டகால மாற்றமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related Articles

Latest Articles