உலகப் புகழ்பெற்ற K-Pop குழுவான BTS-ஐ வரவேற்க Toronto நகரமே தயாராகி வருகிறது!
Toronto-வின் மிகவும் பிரபலமான வீதிகளில் ஒன்றான Yonge Street-இன் ஒரு பகுதி, “BTS Boulevard” என்ற பெயரில் தற்காலிகமாக மாற்றப்படுகிறது.
North York Boulevard முதல் Finch Avenue வரையான Yonge Street பகுதியில் 20 “BTS Boulevard” பெயர்ப் பலகைகள் நிறுவப்படவுள்ளன. அவை ஆகஸ்ட் 21 முதல் செப்டெம்பர் 23 வரை அங்கு இருக்கும். இது Yonge Street-இன் அதிகாரப்பூர்வப் பெயர் மாற்றம் அல்ல; BTS-ஐ கௌரவிக்கும் வகையில் தற்காலிகமாக இணைக்கப்படும் பெயராகும்.
BTS குழு ஆகஸ்ட் 22-23ஆம் திகதிகளில் Toronto-வின் Rogers Stadium-இல் இரண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது.
இதனை முன்னிட்டு BTS ரசிகர்படையை வரவேற்கும் வகையில் இந்த “BTS Boulevard” திட்டத்தை Toronto நகர சபை அங்கீகரித்துள்ளது.
அதேவேளை, BTS இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் திகதிகளில் Toronto City Hall முன்பாக உள்ள பிரபலமான TORONTO Sign ஊதா நிறத்தில் ஒளிரவிடப்படவுள்ளது.
