British Columbia மாகாணத்தில் தோன்றியுள்ள மிதக்கும் தீவு – படகோட்டிகளுக்கு எச்சரிக்கை!

கனடாவின் British Columbia மாகாணத்தில் உள்ள Williston Lake ஏரியில், காற்பந்து மைதானத்தை விடப் பெரிய அளவிலான மிதக்கும் தீவு ஒன்று தோன்றியுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரம் மற்றும் தாவரங்களால் சூழப்பட்டுள்ள இந்த மிதக்கும் தீவை படகோட்டிகள் அணுக வேண்டாம் என BC Hydro நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஆரம்பத்தில் இது ஒரு போலியான செய்தி (Hoax) என சந்தேகிக்கப்பட்டாலும், செயற்கைக்கோள் படங்களின் மூலம் இதன் உண்மைத்தன்மை உறுதிசெய்யப்பட்டது.

சுமார் 140 மீட்டர் நீளமும் 70 மீட்டர் அகலமும் கொண்ட இந்த தீவு, காணாமல் போய் பின்னர் 30 கிலோமீட்டர் தொலைவில் மீண்டும் தோன்றியுள்ளது.

ஏரியின் நீர்மட்டம் உயர்ந்ததால் கரையோரக் கழிவுகள் மற்றும் மரங்கள் ஒன்றாக இணைந்து மிதக்கத் தொடங்கியிருக்கலாம் என BC Hydro-வின் Bob Gammer கணித்துள்ளார்.

இருப்பினும், இது எப்போது வேண்டுமானாலும் உடையக்கூடிய அபாயம் உள்ளதால் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles