Brantford விமான நிலைய எல்லை மாற்றத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!

Brantford Municipal Airport-ஐ Brantford நகர எல்லைக்குள் கொண்டுவரும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையம் City of Brantford-க்குச் சொந்தமானதாக இருந்தாலும், அது தற்போது County of Brant எல்லைக்குள் அமைந்துள்ளது.

இதனால் விமான நிலையத்தையும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 848 ஏக்கர் நிலத்தையும் Brantford நகர எல்லைக்குள் இணைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

எனினும், பொதுமக்களின் கருத்துகள் மற்றும் எதிர்வரும் நகராட்சி தேர்தலை கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கையை October 26, 2026 தேர்தல் முடியும் வரை நிறுத்த City of Brantford மற்றும் County of Brant முடிவு செய்துள்ளன. இதனுடன் தொடர்புடைய பொதுக் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திட்டம் முற்றாக கைவிடப்படவில்லை என்றும், தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் பரிசீலிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் சுமார் 1,317 ஏக்கர் நிலத்தை Brantford நகர எல்லைக்குள் கொண்டுவர முன்மொழியப்பட்டிருந்தது.

ஆனால் பொதுமக்களிடமிருந்து எழுந்த கருத்துகள் மற்றும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, விவசாய நிலங்கள் உள்ளிட்ட சுமார் 469 ஏக்கர் நிலம் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டு, முன்மொழியப்பட்ட பகுதி சுமார் 848 ஏக்கராகக் குறைக்கப்பட்டது.

Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33
Video thumbnail
Facebook, Instagram சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா?
01:33
Video thumbnail
Weekend Plan இருக்கிறதா? வெளியே புறப்படுவதற்கு முன் Scarborough வானிலையை பாருங்கள்!
01:01
Video thumbnail
Toronto Zoo-வுக்கு வந்துள்ள புதிய குட்டி விருந்தினர்!
00:43
Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10

Related Articles

Latest Articles