Brampton-இல் அதிரடி மீட்பு! $8 லட்சம் மதிப்புள்ள திருடப்பட்ட வாகனங்கள், கணினிகள் சிக்கின!

Brampton பகுதியில் நடத்தப்பட்ட விசாரணை ஒன்றில், சுமார் 8 லட்சம் கனடிய டொலர் மதிப்புள்ள திருடப்பட்ட வர்த்தக வாகனங்கள் மற்றும் கணினி உபகரணங்களை Peel Regional Police மீட்டுள்ளது.

ஜூலை 22ஆம் திகதி, திருடப்பட்ட Trailer ஒன்று தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, Heart Lake Road மற்றும் Countryside Drive பகுதியில் பொலிஸார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சுமார் 105,000 டொலர் மதிப்புள்ள நான்கு திருடப்பட்ட வர்த்தக வாகனங்கள் மற்றும் Trailers கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன. 

மீட்கப்பட்ட Trailers-ஐ சோதனையிட்டபோது, அவற்றுக்குள் இரண்டு தொகுதிகளாக திருடப்பட்ட சுமார் 681,000 டொலர் மதிப்பிலான கணினி உபகரணங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவை, ஜூலை 17 மற்றும் 20ஆம் திகதிகளில் இடம்பெற்ற தனித்தனி திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவை என பொலிஸார் நம்புகின்றனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை எந்த சந்தேகநபரும் அடையாளம் காணப்படவில்லை. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Related Articles

Latest Articles