Brampton-இல் புதிய தொழில்நுட்பம்: வாகன வேகத்தை குறைக்க LED நடைபாதைகள் அறிமுகம்!

கனடாவின் Brampton மாநகரில் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும், பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவதற்காக புதிய ஸ்மார்ட் LED நடைபாதை‘ (Smart LED Crosswalks) திட்டத்தை அறிமுகம் செய்ய மாநகர சபை ஆலோசித்து வருகிறது.

மாகாண அரசினால் வேகக்கட்டுப்பாட்டு கமெராக்கள் (Speed Cameras) தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு மாற்றாக இந்த உயர் தொழில்நுட்ப முறையைச் செயல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்துப் பேசிய கவுன்சிலர் Rowena Santos, இந்த LED விளக்குகள் பனிப்பொழிவு, இருள் அல்லது மேகமூட்டமான நேரங்களிலும் வாகன ஓட்டிகளுக்குத் தெளிவாகத் தெரியும் என்றும், பள்ளி மற்றும் சமூகப் பாதுகாப்பு வலயங்களில் வேகத்தைக் குறைக்க இது பெரிதும் உதவும் என்றும் தெரிவித்தார்.

வேகக்கட்டுப்பாட்டு கமெராக்கள் அகற்றப்பட்ட பிறகு, விதிமீறல்கள் இரட்டிப்பாகியுள்ள நிலையில், இந்த புதிய முன்னோடித் திட்டம் (Pilot Project) மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாகாண அரசிடம் இருந்து இதற்காக சுமார் $7 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image – toronto.citynews.ca

Video thumbnail
கனடாவில் அதிகரித்து வரும் பலதுணை உறவுகள் – சட்ட ரீதியில் சிக்கல்!
01:17
Video thumbnail
றொரண்டோவிற்கு விசேட வானிலை எச்சரிக்கை - இடியுடன் கூடிய மழையைத் தொடர்ந்து கடும் குளிர்!
01:09
Video thumbnail
ஸ்மார்ட் கண்ணாடி மூலம் நூதன மோசடி – றொரண்டோவில் பாரிய சில்லறை வர்த்தக மோசடி கும்பல் கைது!
01:00
Video thumbnail
வான்கூவர் ஸ்கைட்ரெயினில் புதிய மார்க் V ரயில்கள் - பயணிகளுக்கு கூடுதல் வசதி!
01:07
Video thumbnail
சர்ச்சில் துறைமுக விரிவாக்கம் - பணிகளை முடிக்க மத்திய அரசு கடுமையான நிபந்தனை!
01:20
Video thumbnail
மிசிசாகாவில் பயங்கர தீ விபத்து - தனது தாய் மற்றும் சகோதரரைக் காப்பாற்ற தீக்குள் குதித்த நபர்!
00:55
Video thumbnail
ஸ்கார்பரோ ரயில் நிலையங்களில் வாகனத் திருட்டு - மூவர் கைது!
01:13
Video thumbnail
மளிகைப் பொருள் விலை உயர்வு - 'சர்வைலன்ஸ் பிரைசிங்' தடையை நிராகரித்தார் முதல்வர் டக் போர்ட்!
01:29
Video thumbnail
ஹாமில்டனில் போலி பொலிஸ் அதிகாரி அட்டகாசம்!
01:11
Video thumbnail
கனடா தபால் சேவை மாற்றம் - வீட்டுக்கு வீடு தபால் விநியோகம் விரைவில் நிறுத்தம்!
01:05

Related Articles

Latest Articles