Billy Bishop விமான நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு ஆதரவு!

டொராண்டோ (Toronto) நகரின் Billy Bishop தீவு விமான நிலையத்தை நவீனமயமாக்கி, பெரிய ஜெட் விமானங்கள் தரையிறங்கும் வகையில் விரிவுபடுத்தும் ஒன்டாரியோ முதல்வர் Doug Ford-இன் திட்டத்திற்கு அதன் உரிமையாளர்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் Toronto Region Board of Trade நிகழ்வில் பேசிய முதல்வர் Doug Ford, இந்த விரிவாக்கத்திற்கு நகர மக்களிடையே 70 சதவீத ஆதரவு இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, Toronto Port Authority-இன் தலைமை நிர்வாக அதிகாரி Roelof-Jan “RJ” Steenstra, போக்குவரத்து அமைச்சர் Prabmeet Sakaria-விற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், தற்போதைய கட்டுப்பாடுகள் மற்றும் குறுகிய கால ஒப்பந்தங்கள் விமான நிலையத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விரிவாக்கத் திட்டம் வெற்றியடைய மத்திய அரசு, மாகாண அரசு மற்றும் நகர நிர்வாகம் ஆகிய மூன்றும் இணைந்து செயல்பட வேண்டும் என ஒன்டாரியோ அரசு அழைப்பு விடுத்துள்ளது.

 

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles