Banff National Park இல் தவறி விழுந்து Calgary ஐச் சேர்ந்த மலையேற்றப் பயணி உயிரிழப்பு!

கனடாவின் Banff National Park இல் உள்ள பிரபல Mount Temple மலையேற்றப் பாதையில் (scrambling route) தவறி விழுந்து Calgary ஐச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை நண்பர்கள் குழுவோடு மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது இத்தவறுதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உடன் சென்றவர்கள் உடனடியாக உதவிக்கு அழைப்பு விடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் விரைந்த Parks Canada அமைப்பின் பாதுகாப்புப் படையினர், ஹெலி-ஸ்லிங் (heli-sling) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவரை மீட்டு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு வந்தனர்.

எனினும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

1,700 மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட Mount Temple பாதை, செங்குத்தான பாறைகள் மற்றும் சரிவுகளையுடைய மிகவும் சவாலான மலையேற்றப் பகுதியாகும்.

இச்சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு Parks Canada தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles