‘Baby Parker’ வழக்கில் அதிரடி திருப்பம்: தாயார் கைது!

கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூலை 28 அன்று, ஒன்டாரியோவின் Brantford பகுதியில் உள்ள Dufferin Avenue மற்றும் Parkside Drive நடைபாதைக்கு அருகே பச்சிளம் ஆண் குழந்தை ஒன்றின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

அந்த குழந்தைக்குப் பொலிஸார் Baby Parker என்று பெயரிட்டு, கடந்த 20 ஆண்டுகளாகத் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

தற்போது கிடைத்துள்ள நவீன DNA தொழில்நுட்பம் மற்றும் புலனாய்வு முறைகளின் உதவியுடன், அக்குழந்தையின் தாயார் என நம்பப்படும் 39 வயதுடைய பெண்ணை Brantford Police கைது செய்துள்ளனர்.

இதற்கு Toronto Police அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் மீது, உடலை அவமதித்தல் மற்றும் குழந்தையின் உடலை மறைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை என்றும், குழந்தையின் தந்தை இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீண்ட கால போராட்டத்திற்குப் பிறகு இந்த வழக்கில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளதாக ஆய்வாளர் Keith Tollar நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles