Alberta கனடாவில் தொடர்ந்து இருக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தில் பிரிவினை தொடர்பான வாக்கெடுப்பை நடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டுமா என்பது குறித்து, ஒக்டோபர் 19ஆம் திகதி மக்கள் வாக்களிக்க உள்ளனர்.
ஆனால் வாக்கெடுப்பின் முடிவு எதுவாக இருந்தாலும், சுதந்திர Alberta-வுக்கான தங்களது பிரச்சாரம் நிறுத்தப்படாது என பிரிவினை ஆதரவு குழுக்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம், Alberta முதல்வர் Danielle Smith, இந்த வாக்கெடுப்பின் மூலம் இந்த விவகாரத்திற்கு ஒரு முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். அதேவேளை, Alberta கனடாவில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும், தானும் அதற்கே வாக்களிப்பேன் என்றும் அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
கனடாவுடன் தொடர விரும்பும் தரப்பினரும், வாக்கெடுப்பிற்குப் பின்னரும் இந்த விவாதம் தொடரக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.
இதனால், ஒக்டோபர் 19 Alberta வாக்கெடுப்பு பிரிவினை விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா, அல்லது புதிய கட்டத்தை உருவாக்குமா என்பது வாக்கெடுப்புக்குப் பின்னரே தெளிவாகும்.
