Alberta கனடாவிலிருந்து பிரியுமா? அக்டோபர் 19 இல் முக்கிய வாக்கெடுப்பு

கனடாவிலிருந்து Alberta தனிநாடாகப் பிரிய வேண்டுமா என்ற விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

அக்டோபர் 19ஆம் தேதி Alberta மக்கள் 10 கேள்விகள் தொடர்பாக வாக்களிக்க உள்ள நிலையில், பிரிவினைக்கு ஆதரவாகவும் எதிராகவும் இரு தரப்பினரும் பிரசாரங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த 10 கேள்விகளில் immigration மற்றும் கனடிய அரசியலமைப்பு தொடர்பான கேள்விகளுடன், Alberta பிரிவினை தொடர்பாக பின்னர் கட்டுப்படுத்தக்கூடிய இரண்டாவது referendum நடத்த வேண்டுமா? என்ற கேள்வியும் இடம்பெறுகிறது.

சனிக்கிழமை Edmonton-ல் உள்ள Alberta Legislature முன்பாக நூற்றுக்கணக்கானவர்கள் பிரிவினைக்கு ஆதரவான பேரணியில் கலந்து கொண்டனர்.

Alberta Prosperity Project தலைவர் Mitch Sylvestre, ஒரு வருடத்திற்கு முன்பு இப்படியான வாக்கெடுப்பு நடைபெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும், தற்போது Alberta independence குறித்து அதிகமானவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

மத்திய அரசாங்கம் Alberta-வை புறக்கணிப்பதாகவும், pipelines மற்றும் பொருளாதாரம் தொடர்பான Ottawa-வின் அணுகுமுறையில் பல Albertans அதிருப்தியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் பொதுமக்கள் கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து பெரும்பாலான Albertans கனடாவிலேயே தொடர விரும்புகின்றனர் என்பதைக் காட்டுகின்றன.

இதற்கிடையில் Calgary-யில் Alberta கனடாவின் ஒரு பகுதியாகவே தொடர வேண்டும் என்பதை ஆதரித்து நூற்றுக்கும் அதிகமானவர்கள் மற்றொரு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Alberta NDP தலைவர் Naheed Nenshi, பிரிவினைவாதிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அவர்கள் வாக்களிப்பதில் அதிக உற்சாகத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைச் செலவு, எரிசக்தி வளங்கள், பொருளாதாரம் மற்றும் Ottawa உடனான உறவு ஆகியவை இந்த விவாதத்தின் முக்கிய காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன.

Alberta கனடாவுடன் தொடருமா? அல்லது பிரிவினை குறித்த அடுத்த கட்ட referendum-க்கு வழி திறக்கப்படுமா?

அக்டோபர் 19 வாக்கெடுப்பு தற்போது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Articles

Latest Articles