அல்பெர்டா மாகாணத்தின் வடமத்திய பகுதியில் உள்ள Swan Hills நகரில் காட்டுத் தீ பரவியுள்ளது. இதனால் அங்கிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடர்பெயர்ந்துள்ளனர்.
மெர்கோல் அருகே கட்டுப்பாட்டை இழந்த காட்டுத் தீ, வானிலை மாற்றங்களால் Swan Hills நகரத்தை நோக்கி வேகமாக பரவுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அல்பெர்டா மாகாணத்தின் வனப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சியும், அதிக வெப்பமும், பலத்த காற்றும் இந்த தீ பரவலுக்கு காரணமாக உள்ளன.
அல்பெர்டா அவசரகால மேலாண்மை முகமை, மக்கள் பாதுகாப்புக்காக தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள், அவசர உதவி மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அல்பெர்டா வனத்துறையினரும், அவசரகால மேலாண்மை முகமை அதிகாரிகளும் தீயைக் கட்டுப்படுத்த கடுமையாக போராடி வருகின்றனர்.
பொதுமக்கள் மக்கள், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றி, பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.