Alberta கோர விபத்தில் இளம் ஹொக்கி வீராங்கனைகள் இருவர்​ உயிரிழப்பு!

Alberta மாகாணத்தின் Highway 16 இல் இடம்பெற்ற கோர விபத்தில், Jasper U18 Bearcats ஹொக்கி அணியைச் சேர்ந்த 17 வயதான  Kayla Peacock  மற்றும் 18 வயதான Danica Hills  ஆகிய இரு வீராங்கனைகள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இரவு பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, இவர்கள் பயணித்த வாகனம் பாரவூர்தி (Semi-trailer) ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

நெருங்கிய நண்பிகளான இவர்கள் இருவரும் உயர்தரக் கல்வியை முடித்துவிட்டு தத்தமது கனவுப் படிப்பைத் தொடரத் தயாராக இருந்த நிலையில், இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மோசமான வானிலை மற்றும் சாலை நிலைமைகளே விபத்துக்குக் காரணம் என RCMP பொலிஸார் நம்புகின்றனர்.

இவர்களின் நினைவாக அடுத்த வாரம் சிறப்பு ஹொக்கி போட்டி ஒன்று நடைபெறவுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles