Air Canada விமான விபத்துக்கு முன் பணியை முன்கூட்டியே முடித்த விமானக் கட்டுப்பாட்டாளர்கள்?

அமெரிக்காவின் நியூயோர்க் LaGuardia விமான நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் நிகழ்ந்த Air Canada Express விமான விபத்துக்கு முன்பாக, இரண்டு விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் தங்களது பணிநேரம் முடிவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பே பணியிடத்தை விட்டு சென்றதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விபத்தில் இரண்டு கனேடிய விமானிகள் உயிரிழந்ததுடன், 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அமெரிக்க ஊடகங்களின் தகவலின்படி, சம்பந்தப்பட்ட இரண்டு விமானக் கட்டுப்பாட்டாளர்களையும் பணிநீக்கம் செய்வது குறித்து Federal Aviation Administration — FAA பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த மார்ச் 22ஆம் திகதி இரவு 11.30 மணிக்குப் பின்னர், Air Canada Express விமானம் தரையிறங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், அதற்கு இரண்டு நிமிடங்களுக்குள் அதே ஓடுபாதையை கடக்க தீயணைப்பு வாகனத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து, மழையால் நனைந்த ஓடுபாதையில் வேகமாக வந்த விமானமும் தீயணைப்பு வாகனமும் மோதிக் கொண்டன.

இதில் Air Canada Express விமானிகள் இருவரும் உயிரிழந்தனர்.

ஆனால், இறுதி நேரத்தில் அவர்கள் மிக வேகமாக எடுத்த braking நடவடிக்கை காரணமாக பல பயணிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. 

இந்நிலையில், விபத்துக்கு முன் இரண்டு விமானக் கட்டுப்பாட்டாளர்கள் பணியிடத்தை முன்கூட்டியே விட்டு சென்றார்களா, அது பாதுகாப்பு நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதா என்பது தற்போது தீவிர விசாரணைக்கு உள்ளாகியுள்ளது.

Related Articles

Latest Articles