AC இல்லாமல் வெப்பத்தில் தவிக்கும் குழந்தைகள்! Ontario Daycare-களுக்கு அதிகபட்ச வெப்பநிலை விதி வேண்டுமா?

கனடாவில் கோடை கால வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், AC அல்லது போதுமான cooling வசதி இல்லாத சில daycare centres குறித்து புதிய கவலை எழுந்துள்ளது. 

பெற்றோர், குழந்தை பராமரிப்பு கல்வியாளர்கள், சுகாதாரம் மற்றும் சட்ட வழக்கறிஞர்கள் ஆகியோர் குழந்தைகளுக்கு பாதுகாப்பான அதிகபட்ச உட்புற வெப்பநிலை ஒன்றை அரசு நிர்ணயிக்க வேண்டும் எனக் கோருகின்றனர்.

குறிப்பாக Ontario-வில் licensed child-care centres-க்கான தற்போதைய விதிகள், அறையின் வெப்பநிலை குறைந்தபட்சம் 20°C இருக்க வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் அதிகபட்ச வெப்பநிலை எவ்வளவு இருக்கலாம் என்பதற்கான சட்ட வரம்பு தற்போது இல்லை.

இந்த நிலையில், அதிகபட்ச வெப்பநிலையை 26°C ஆக நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

Toronto-வில் சில பெற்றோர், daycare அறைகள் 27 முதல் 30 பாகை செல்சியஸ் வரை வெப்பமடைந்ததாகவும், குழந்தைகள் அதிகமாக வியர்த்து, உடல்நலக்குறைவாக உணர்ந்ததாகவும் முன்பு தெரிவித்துள்ளனர்.

இளம் குழந்தைகள் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடியவர்கள். நீண்ட நேரம் மிகவும் சூடான உட்புறச் சூழலில் இருப்பது வெப்பம் தொடர்பான நோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என சுகாதார வழிகாட்டுதல்கள் எச்சரிக்கின்றன.

எனவே Daycare-களில் Air Conditioning ஒரு luxury-ஆ? அல்லது குழந்தைகளின் பாதுகாப்புக்கான அடிப்படை தேவையா? என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது.

Related Articles

Latest Articles