மிசிசாகாவில் விற்பனை செய்யப்பட்ட லொட்டரி சீட்டிற்கு 38 மில்லியன் டொலர் ஜாக்பாட் பரிசு!

cp24

புதன்கிழமை (நவம்பர் 11) இரவு நடைபெற்ற LOTTO 6/49 Gold Ball குலுக்கலில், 38 மில்லியன் டொலர் பெறுமதியான பிரமாண்ட பரிசை வென்ற அதிர்ஷ்ட சீட்டு மிசிசாகாவில் (Mississauga) விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ லொட்டரி மற்றும் கேமிங் கூட்டுத்தாபனம் (OLG) அறிவித்துள்ளது.

இதனைத் தவிர, LOTTO 6/49 இரண்டாவது பரிசான 211,077.30 டொலர்களை வென்ற சீட்டு ரொறன்ரோவில் (Toronto) விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, ஒன்ராறியோவின் (Ontario) லீட்ஸ் மற்றும் கிரென்வில் (Leeds and Grenville) பிராந்தியத்தில் விற்பனை செய்யப்பட்ட சீட்டிற்கு 1 மில்லியன் டொலர் ENCORE பரிசு விழுந்துள்ளது.

இந்தப் பரிசுகளை வென்றவர்கள் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

எனவே, லொட்டரி சீட்டுக்களை வாங்கியவர்கள் தமது சீட்டுக்களை OLG செயலி மூலமாகவோ அல்லது விற்பனை நிலையங்களுக்குச் சென்றோ சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Previous articleபிரதமர் மார்க் கார்னியின் ஐரோப்பா பயணம் தீரவாகாது – எதிர்க்கட்சிகள் விசனம்!
Next articlePearson விமான நிலையத்தில் பயணிகளின் பொதிகளில் தில்லு முல்லு – பாதிக்கப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.