கடுமையான வானிலை மாற்றங்கள், இணையத் தாக்குதல்கள் (Cyberattacks) அல்லது பிற அவசரநிலைகளின் போது, குடிநீர் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் இன்றி குறைந்தது 72 மணிநேரம் தங்களைச் சமாளித்துக் கொள்ள கனடியர்கள் தயாராக இருக்க வேண்டும் என கனடிய பொது பாதுகாப்புத் துறை (Public Safety Canada) அறிவுறுத்தியுள்ளது.
பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் அவசரகால தயார்நிலை குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், இந்த 72 மணிநேர விதி கனடாவிற்குப் புதிய ஒன்றல்ல என்றும், இது கடந்த 30 ஆண்டுகளாக இருக்கும் நடைமுறைதான் என்றும் கனடா பேரழிவு மீட்பு நிறுவனத்தின் (Disaster Recovery Institute of Canada) பயிற்றுவிப்பாளர் சுசான் பெர்னியர் (Suzanne Bernier) தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இணையத் தாக்குதல்களின் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், மக்கள் பீதியடையாமல் தங்களின் அவசரகால உதவிக் கருவிகளை (Emergency kits) தயாராக வைத்திருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
