நவம்பர் 11 நினைவேந்தல் நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையாகுமா?

ctvnews

அட்லாண்டிக் கனடாவின் (Atlantic Canada) நான்கு மாகாணங்களில் மூன்றில் நினைவேந்தல் நாள் (Remembrance Day) சம்பளத்துடன்கூடிய சட்டப்பூர்வ பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நோவா ஸ்கோஷியாவில் (Nova Scotia) மட்டும் அது நடைமுறையில் இல்லை என சர்ச்சை எழுந்துள்ளது.

இராணுவ மற்றும் கடற்படை வரலாற்றைக் கொண்ட நோவா ஸ்கோஷியாவிலும் இந்நாளை சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என அலன் ஸ்லோன் (Alan Sloan) மற்றும் ஓவன் ஹுய்ஸ்மேன் (Owen Huisman) போன்ற உள்ளூர்வாசிகளும் மாணவர்களும் வலியுறுத்துகின்றனர்.

எனினும், இவ்வாறான புதிய பொது விடுமுறையைச் சேர்ப்பது குறித்து அரசு தற்போது பரிசீலிக்கவில்லை என தொழிலாளர் அமைச்சர் நோலன் யங் (Nolan Young) தெரிவித்துள்ளார்.

இது வணிக நிறுவனங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், விரிவான ஆலோசனைகள் தேவைப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, கனடிய ராயல் லீஜியன் (Royal Canadian Legion) அமைப்பு இந்த மாற்றத்தை எதிர்க்கிறது.

நினைவேந்தல் நிகழ்வுகளில் மக்கள் தன்னிச்சையாகப் பங்கேற்பதே சிறப்பு என்றும், விடுமுறை அளித்தால் மக்கள் வேறு பொழுதுபோக்குகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் நுஜ்மா போண்ட் (Nujma Bond) தெரிவித்துள்ளார்.

Previous articleStellantis தொழிற்சாலை விவகாரம் : துரோகம் என விமர்சிக்கும் பிரதமர் Carney!
Next articleஅத்தியாவசிய சேவைகளின்றி 72 மணிநேரம் சமாளிக்க கனடியர்கள் தயாராக இருக்க வேண்டும்: நிபுணர்கள் எச்சரிக்கை