ஹாலோவீன் சாக்கலேட்டில் கஞ்சா: 4 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதி!

ctvnews

கனடாவின் Quebec மாகாணத்தில், Halloween பண்டிகையின் போது பெற்ற சாக்கலேட்டை சாப்பிட்ட 4 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mylan என்ற 4 வயது சிறுவன், தான் சாப்பிட்ட சாக்கலேட் விசித்திரமான சுவையுடன் இருந்ததாகக் கூறி எச்சில் வடித்ததையடுத்து, அவனது வளர்ப்புத் தாயாரான ரெபெகா லெஃபெவ்ரே (Rebeka Lefebvre) சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், கஞ்சாவில் காணப்படும் போதைப்பொருளான டி.எச்.சி (THC) சிறுவனின் உடலில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த அதிர்ச்சி சம்பவத்தையடுத்து, கியூபெக் மாகாண பொலிஸார் (Sûreté du Québec – SQ) இது தொடர்பாக தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தற்போது அச்சிறுவன் வீட்டில் நலமாக மீண்டு வரும் நிலையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஹாலோவீன் மிட்டாய்களை பரிசோதிப்பதில் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு லெஃபெவ்ரே எச்சரித்துள்ளார்.

சிறு குழந்தைகள் அதிக அளவு கஞ்சாவை உட்கொண்டால் கோமா நிலை வரை செல்லக்கூடும் என மெக்கில் பல்கலைக்கழக சுகாதார மையத்தின் (McGill University Health Centre) மருத்துவர் கிறிஸ்டோபர் லாபோஸ் (Dr. Christopher Labos) எச்சரித்துள்ளார்.

Previous articleMilton நகரில் கைவிடப்பட்ட கட்டிடத்தில் தீ விபத்து: உயிர்ச்சேதம் இல்லை!
Next articleஅமெரிக்காவின் புதிய வரியால் கனடாவில் பல்லாயிரக்கணக்கான ஆடுகள் கொல்லப்படும் அபாயம்!