அமெரிக்காவின் புதிய வரியால் கனடாவில் பல்லாயிரக்கணக்கான ஆடுகள் கொல்லப்படும் அபாயம்!

ctvnews

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) கனடா நாட்டின் ஆட்டுப்பால் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளதால், கனடாவின் பால் பண்ணை தொழிற்துறை பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.

ஒன்டாரியோவின் லின்ட்சே (Lindsay, Ont.) பகுதியில் இயங்கும் மேரிபோசா டெய்ரி (Mariposa Dairy) நிறுவனம், தங்களது உற்பத்தியில் 80 சதவீத ஆட்டுப்பால் பாலாடைக்கட்டிகளை (Goat cheese) அமெரிக்காவிற்கே ஏற்றுமதி செய்து வருகிறது.

காஸ்ட்கோ (Costco), டிரேடர் ஜோஸ் (Trader Joe’s) போன்ற பெரிய நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யும் இந்நிறுவனத்திற்கு, இந்த வரி உயர்வினால் வாரத்திற்கு சுமார் 1 மில்லியன் டொலர் இழப்பு ஏற்படுகிறது என அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஆண்டர்சன் (Mark Anderson) தெரிவித்துள்ளார்.

இந்நிறுவனம் சுமார் 50,000 ஆடுகளைக் கொண்ட 200 ஆட்டுப்பால் பண்ணைகளிடம் இருந்து பாலைக் கொள்முதல் செய்கிறது.

அமெரிக்க வர்த்தகக் கொள்கையில் உடனடி தீர்வு கிடைக்காவிட்டால் அல்லது அரசாங்கத்தின் நிதி உதவி கிடைக்காவிட்டால், பால் கொள்முதலைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இதனால் பல்லாயிரக்கணக்கான ஆடுகளைக் கொல்ல வேண்டிய கட்டாயம் பண்ணையாளர்களுக்கு ஏற்படும் என்றும் கேப் பென்சாப் (Gabe Benschop) உள்ளிட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அமெரிக்காவின் கெல்லர்ட் குளோபல் குரூப் (Gellert Global Group) நிறுவனம் இந்த வரி விதிப்புக்கு எதிராக அமெரிக்க அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஹாலோவீன் சாக்கலேட்டில் கஞ்சா: 4 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதி!
Next articleகியூபெக்கில் அடுத்தடுத்து தீ வைப்புச் சம்பவங்கள்: உணவகம் முற்றிலும் எரிந்து சாம்பல்!