வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான கனடா கூட்டாட்சி பட்ஜெட்டில், மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் நோக்கில் $22 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நிவாரணம் 50% உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் தனிநபர் ஒருவர் ஆண்டிற்கு $1,290 வரையிலும், இரண்டு குழந்தைகளைக் கொண்ட தம்பதியினர் $2,570 வரையிலும் பெற முடியும்.
குறைந்த வருமானம் பெற்று வரி செலுத்தாத பராமரிப்பாளர்களுக்கும் (Caregivers) உதவும் வகையில் இந்த வரிச் சலுகை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆண்டிற்கு $1,260 வரை திரும்பப் பெறலாம்.
பெட்ரோல் மீதான வரிக் குறைப்பு 2027 ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லிட்டருக்கு 10 சென்ட் வரை சேமிக்க முடியும்.
குறைந்த வருமானம் பெறும் ஊழியர்களுக்கான தகுதி வரம்பு $3,000 இலிருந்து $500 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
வீடற்ற நிலையை ஒழிக்க $11.2 பில்லியன் மற்றும் RRSP / RRIF சேமிப்புக் கணக்குகளை ஒருங்கிணைத்து வரி இல்லாத மாற்றங்களைச் செய்ய திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த பட்ஜெட் வணிக முதலீடுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும், சாதாரண மக்களுக்கு உடனடி பெரிய நிவாரணம் இதில் போதியளவில் இல்லை என்றும் பொருளாதார நிபுணர் ஆர்மைன் யால்னிஜியன் (Armine Yalnizyan) தெரிவித்துள்ளார்.










