Bombardier விவகாரத்தில் பிடியைத் தளர்த்திய டிரம்ப்!

கனடாவின் விமான தயாரிப்பு நிறுவனமான Bombardier தயாரிப்புகளை அமெரிக்க சந்தையில் தடை செய்யப்போவதாக முன்னர் விடுத்த மிரட்டலிருந்து, அமெரிக்க அதிபர் Donald Trump தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக மோதல் தீவிரமடைந்தபோது, “அமெரிக்காவில் இனி Bombardier விமானங்கள் விற்பனை செய்யப்படாது” என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.

ஆனால், கேன்சாஸ் (Kansas) மாகாணத்தின் விசிட்டா (Wichita) நகரில் இந்த நிறுவனம் சுமார் 1,500 அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருவதையும், அமெரிக்கா முழுவதும் 3,500 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளதையும் அறிந்து கொண்ட டிரம்ப், “நாங்கள் Bombardier நிறுவனத்தையும், அங்குள்ள அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளையும் பாதுகாப்போம்” என்று தனது தொனியை மாற்றிக் கூறியுள்ளார்.

கேன்சாஸ் நகரில் குடியரசுத் கட்சி செனட்டர் ரோஜர் மார்ஷல் (Roger Marshall) அவர்களின் பிரசாரத்தில் பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்துப் பேசிய கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் (Dominic LeBlanc), Bombardier நிறுவனம் அமெரிக்கப் பொருளாதாரத்தில் நீண்டகாலமாக ஆழமான பங்களிப்பைக் கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஒட்டுமொத்த கனடியப் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும் வகையில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எட்டப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles