ISIS தீவிரவாதியைத் திருமணம் செய்து கொண்ட கனடா பெண் – தீவிரவாத குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார்!

ctvnews

ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாதியைத் திருமணம் செய்து கொண்டு சிரியாவுக்குச் சென்ற கனடாவின் Squamish, B.C. பகுதியைப் சேர்ந்த பெண் ஒருவர் தீவிரவாத குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார்.

Kimberly Polman என்ற பெண், கடந்த 2015 ஆம் ஆண்டு இணையம் மூலம் அறிமுகமான தனது கணவருடன் இணைவதற்காகக் கனடாவை விட்டுச் சென்றார்.

பின்னர் சிரியாவில் உள்ள தடுப்பு முகாமில் பல ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டு, கடந்த 2022 ஆம் ஆண்டு கனடாவிற்கு அழைத்து வரப்பட்டார்.

அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பு, “தீவிரவாதக் குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்கக் கனடாவை விட்டு வெளியேறியது” என்ற குற்றச்சாட்டை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

இதற்கான அதிகபட்ச தண்டனை 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையாகும்.

தான் செய்த செயல்களுக்குப் பொறுப்பேற்பதாகவும், தற்போது குடும்பத்தினரின் ஆதரவுடன் தண்டனை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளவிருப்பதாகவும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous articleகனடாவில் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு ALS பாதிப்பு – கவனம் செலுத்துவதாக ஒட்டாவா அறிவிப்பு!
Next articleCalgary நகரில் காரை திருட முயற்சி – Bolt cutter தாக்குதலுக்கு ஆளான நபர் படுகாயம்!