ஒன்டாரியோவில் உரிமை கோரப்படாமல் இருக்கும் நாற்பது மில்லியன் டொலர் பெறுமதியான லொட்டோ பரிசு!

cp24

ஒன்டாரியோவில் ($40M) நாற்பது மில்லியன் டொலர் பெறுமதியான லொட்டோ பரிசுத் தொகை இன்னும் உரிமை கோரப்படாமல் உள்ளதாகவும், அது இந்த மாதத்துடன் காலாவதியாகவுள்ளதாகவும் OLG  எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு (Oct. 28, 2025) நடைபெற்ற Lotto Max குலுக்கலில், Grey County பகுதியில் விற்கப்பட்ட இச்சீட்டுக்கான பரிசை வென்றவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. குறித்த குலுக்கல் எண்கள்: 06, 14, 17, 19, 26, 43, 45 (Bonus: 27) ஆகும்

Owen Sound, Meaford, The Blue Mountains, Flesherton, Markdale, Durham மற்றும் Hanover ஆகிய Grey County பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அல்லது அங்கு சுற்றுலா சென்றவர்கள் உடனடியாக தங்கள் சீட்டுக்களை சோதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சீட்டுக்கான உரிமை கோரும் காலம் வரும் October 28, 2026 அன்றுடன் நிறைவடையவுள்ளது.

எனவே, உரியவர்கள் உடனடியாக OLG செயலி (App) மூலமாகவோ அல்லது OLG இணையதளம் மூலமாகவோ தங்களின் சீட்டுக்களை சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Previous articleவீடற்றோர் முகாம்களால் அருங்காட்சியகத்திற்கு $3,000 அபராதம்: கனடாவின் Oshawa நகரில் சர்ச்சை!
Next articleகொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையானவர் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை!