வீடற்றோர் முகாம்களால் அருங்காட்சியகத்திற்கு $3,000 அபராதம்: கனடாவின் Oshawa நகரில் சர்ச்சை!

cbc

கனடாவின் Oshawa நகரில் அமைந்துள்ள Canadian Automotive Museum எனும் தொண்டு நிறுவன அருங்காட்சியகத்திற்கு, அதன் வளாகத்தில் வீடற்றவர்கள் தங்குவதாகவும், இடையூறான செயல்களில் ஈடுபடுவதாகவும் கூறி Oshawa நகர சபை $2,750 அபராதம் விதித்துள்ளது.

அருங்காட்சியகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் Alexandra Miller-Gerrard கூறுகையில், வளாகத்தில் வீடற்றவர்கள் தங்குவது, கூச்சலிடுவது மற்றும் குப்பைகளை வீசுவது போன்ற செயல்களைத் தடுக்கத் தவறியதாகக் கூறி செப்டம்பர் 15 முதல் இதுவரை 7 அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஆனால், இந்த அபராதத் தொகையையோ அல்லது முழுநேர பாதுகாப்பிற்கான செலவையோ ஏற்கும் சக்தி ஒரு தொண்டு நிறுவனமான தங்களுக்கு இல்லை என அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு கேமராக்கள், விளக்குகள் போன்றவற்றை அருங்காட்சியகம் மேம்படுத்திய போதிலும், சட்டவிரோதச் செயல்களும் சொத்துச் சேதங்களும் தொடர்வதாகக் கூறப்படுகிறது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த Ontario Tech University குற்றவியல் பேராசிரியர் Tyler Frederick, வீடற்றோர் பிரச்சினைக்கான மூலக்காரணத்தைக் கண்டறிந்து தீர்வுகாண்பதை விடுத்து, தொண்டு நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பது தீர்வாகாது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous articleஇஸ்லாமிய பாடசாலைக்கு அச்சுறுத்தல்: ஆதரவு கரம் நீட்டிய கனடிய மதத் தலைவர்கள்!
Next articleஒன்டாரியோவில் உரிமை கோரப்படாமல் இருக்கும் நாற்பது மில்லியன் டொலர் பெறுமதியான லொட்டோ பரிசு!