இஸ்லாமிய பாடசாலைக்கு அச்சுறுத்தல்: ஆதரவு கரம் நீட்டிய கனடிய மதத் தலைவர்கள்!

citynews

கனடாவின் Calgary நகரில் உள்ள MAC Islamic School உட்பட நாடு முழுவதும் இயங்கும் 9 இஸ்லாமிய பாடசாலைகளுக்கு, முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் கொலை அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மின்னஞ்சலில் சிறுவர்கள் உட்பட முஸ்லிம்களைக் கொல்வதாகவும், ஆயுதமேந்திய வன்முறையில் ஈடுபடப் போவதாகவும் அச்சுறுத்தப்பட்டிருந்ததுடன், இனவெறி மற்றும் வெறுப்புப் பேச்சுகளும் இடம்பெற்றிருந்தன.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், மாணவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையிலும் Calgary பகுதியின் பல்வேறு மதத் தலைவர்களும் ஒன்றிணைந்து பாடசாலைக்கு நேரில் சென்று தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த பாடசாலையின் இயக்குனர் Mazen Jichi மற்றும் Calgary Unitarians அமைப்பின் Rev. Samaya Oakley ஆகியோர், வெறுப்புணர்வுக்கு எதிராக சமூகம் ஒன்றாக நிற்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

கனடாவில் 2020 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் 170 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக Statistics Canada தெரிவிக்கிறது.

தற்போது பாடசாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், Calgary காவல் துறையினரும் RCMP அதிகாரிகளும் இது தொடர்பான தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleThanksgiving வார இறுதியில் Isaias சூறாவளியால் கனடா வானிலையில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்!
Next articleவீடற்றோர் முகாம்களால் அருங்காட்சியகத்திற்கு $3,000 அபராதம்: கனடாவின் Oshawa நகரில் சர்ச்சை!