உறைபனியில் உறைந்து உயிரிழந்த இந்திய குடும்பம் – மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த அமெரிக்க நீதிமன்றம்!

ctvnews

கனடா – அமெரிக்க (Canada-U.S.) எல்லையில் இடம்பெற்ற மனித கடத்தல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஹர்ஷ்குமார் படேல் (Harshkumar Patel) தாக்கல் செய்த மேல்முறையீட்டை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கனடாவின் மானிட்டோபா (Manitoba) மாநிலத்திலிருந்து கடும் பனிப்புயலுக்கு மத்தியில் அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற இந்தியாவைச் சேர்ந்த ஜகதீஷ் படேல் (Jagdish Patel – 39), அவரது மனைவி வைஷாலிபென் படேல் (Vaishaliben Patel – 37), மகள் விஹான்ஜி (Vihangi – 11) மற்றும் 3 வயது மகன் தார்மிக் (Dharmik) ஆகிய நால்வரும் உறைபனியில் உறைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாணவர் விசா மூலம் இந்தியர்களைக் கனடாவிற்கு அழைத்து வந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் கடத்தும் இந்த நெட்வொர்க்கை ஒருங்கிணைத்ததற்காக ஹர்ஷ்குமார் படேலுக்கு (Harshkumar Patel) 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டு முந்தைய தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Previous articleTumbler Ridge துப்பாக்கிச்சூட்டுக்கு நிதி வழங்கிய அமெரிக்கர்: சதித் திட்டம் தீட்டியதாக வழக்குப் பதிவு!
Next articleஒட்டாவா வாசிகள் தயாராக இருக்க வேண்டும்: தீவிர குடியேற்ற எதிர்ப்பு அமைப்பு எச்சரிக்கை!