Tumbler Ridge துப்பாக்கிச்சூட்டுக்கு நிதி வழங்கிய அமெரிக்கர்: சதித் திட்டம் தீட்டியதாக வழக்குப் பதிவு!

கனடாவில் இடம்பெற்ற Tumbler Ridge துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், அமெரிக்காவின் (U.S.) வொஷிங்டன் (Washington) மாநிலத்தைச் சேர்ந்த 30 வயதான ஜேம்ஸ் கோடி பிரையன்ட் (James Cody Bryant) என்பவர் மீது அமெரிக்க அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வெளிநாட்டில் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகப் பதில் அமெரிக்க சட்டத்தரணி நீல் Neil Floyd அறிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் கனடிய வரலாற்றில் மிகவும் மோசமான துப்பாக்கிச்சூட்டை நடத்திய 18 வயதான Jesse Van Rootselaar என்பவருக்கு James Cody Bryant நிதியுதவியும் ஆதரவும் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

Jesse Van Rootselaar தனது தாய் மற்றும் தம்பியைக் சுட்டுக் கொன்ற பிறகு, Tumbler Ridge மேல்நிலைப் பாடசாலைக்குச் சென்று ஐந்து மாணவர்கள் மற்றும் ஓர் ஆசிரியரைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவீடு வாங்குவதற்காக பலவிதமான சமரசங்களை செய்யும் கனடியர்கள் – ஆய்வில் தகவல்!
Next articleஉறைபனியில் உறைந்து உயிரிழந்த இந்திய குடும்பம் – மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த அமெரிக்க நீதிமன்றம்!