
கனடா தனக்கான புதிய வெளிநாட்டு உளவு அமைப்பை (Foreign spy service) உருவாக்குவது குறித்துத் திட்டமிடும் போது, அதன் ஆபத்துக்கள் மற்றும் நடைமுறைச் சவால்களைத் தீர்க்கமாக ஆராய்ந்து தெளிவான முடிவை எடுக்க வேண்டும் எனப் புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
முன்னாள் உளவுத்துறை அதிகாரிகளான Alan Barnes மற்றும் Geoff St. John ஆகியோர் எழுதிய இந்த ஆய்வு அறிக்கை Policy Insights Forum இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திரைப்படங்களில் காட்டப்படும் ‘James Bond’ பாணி கதைகள் வெறும் கற்பனையே தவிர, நிஜத்தில் உளவுத்துறை செயல்பாடுகள் மிகவும் கடினமானவை என்றும், பிடிபடும் உளவாளிகள் சித்திரவதை மற்றும் மரண தண்டனை வரை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடா ஏற்கனவே CSE, CSIS மற்றும் Global Affairs Canada மூலம் தேவையான தகவல்களைச் சேகரித்து வரும் நிலையில், புதிதாக ஒரு உளவு அமைப்பை உருவாக்குவது பெரும் இராஜதந்திர மற்றும் நிதி ரீதியான அபாயங்களை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, போதுமான திட்டமிடல் இன்றி உருவாக்கப்படும் திறனற்ற உளவு அமைப்பு கனடாவிற்குப் பெரும் நிதிச்சுமையையும் அவமானத்தையும் மட்டுமே தரும் என்பதால், மத்திய அரசு இதில் கவனமாகச் செயல்பட வேண்டும் என வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.