கனடாவில் 6 வயது சிறுமி காணாமல்போயுள்ளார்: தேடிவரும் பொலிஸார்!

cp24

கனடாவின் Whitby பகுதியில் காணாமல்போன 6 வயது சிறுமியைத் தேடுவதற்கு Durham Regional Police பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

Kaylee என்ற இந்தச் சிறுமி, சனிக்கிழமை இரவு 10:30 மணியளவில் Highway 401 பகுதிக்கு வடக்கே உள்ள Dundas Street East மற்றும் Thikson Road சந்திப்பில் கடைசியாகப் பார்க்கப்பட்டதாக செவ்வாய்க்கிழமை காலை பொலிஸார் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து CTV News செய்திச்சேவைக்குத் தெரிவித்துள்ள பொலிஸார், இச்சிறுமி காணாமல்போனதில் இதுவரை சந்தேகத்திற்குரிய அல்லது குற்றவியல் பின்னணி எதுவும் தென்படவில்லை எனக் கூறியுள்ளனர்.

காணாமல்போன Kaylee 4 அடி உயரமும், மெலிந்த உடலமைப்பும், நீண்ட பொன்னிற முடியும், நீல நிறக் கண்களும் கொண்டவர்.

அவர் கடைசியாகச் செல்லும்போது, உட்பகுதியில் பூக்கள் அச்சிடப்பட்ட தொப்பி கொண்ட purple jacket, pink pants மற்றும் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறக் காலணிகளை அணிந்திருந்தார்.

இச்சிறுமி குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக 905-579-1520 என்ற எண்ணில் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Previous articleவெளிநாட்டு உளவு அமைப்பு உருவாக்கம் – எச்சரிக்கையுடன் முடிவெடுக்க வேண்டுமென கனடாவிற்கு எச்சரிக்கை!
Next articleடொராண்டோ மேயர் தேர்தல் கருத்துக் கணிப்பில் ஒலிவியா சோ முன்னிலை!