Toronto மேயர் தேர்தலில் வாக்காளர்களின் ஆதரவில் Olivia Chow, Brad Bradfordஐ விட சுமார் 10 சதவீதப் புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதாகப் புதிய கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
CP24 மற்றும் ‘சிடிவி நியூஸ் CTV News Toronto ஆகியவற்றிற்காக Nanos Polling நிறுவனம் நடத்திய இக்கருத்துக் கணிப்பில், முடிவெடுத்த வாக்காளர்களில் 52.4 சதவீதம் பேர் ‘ஒலிவியா சோ‘விற்கும், 42.6 சதவீதம் பேர் ‘பிராட் பிராட்ஃபோர்ட்‘டிற்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது இடத்தில் உள்ள Chris Alexander 4 சதவீத ஆதரவை மட்டுமே பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
இக்கருத்துக் கணிப்பின்படி, Toronto-East York பகுதியில் ‘ஒலிவியா சோ‘ 60 சதவீதத்திற்கும் அதிகமான ஆதரவைப் பெற்றுள்ளதோடு, Scarborough பகுதியிலும் முன்னிலையில் உள்ளார்.
மேலும், பெண் வாக்காளர்களிடையே சோ 60.2 சதவீத ஆதரவைப் பெற்றுள்ள நிலையில், பிராட்ஃபோர்ட் ஆண் வாக்காளர்களிடையே 50.7 சதவீத ஆதரவுடன் சற்று முன்னிலையில் இருக்கிறார்.
இத்தேர்தல் போட்டி இரு பிரதான வேட்பாளர்களுக்கு இடையிலான கடுமையான போட்டியாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள ‘நானோஸ் போலிங்‘ அமைப்பின் தலைமைத் தரவு விஞ்ஞானி Nik Nanos), இன்னும் முடிவெடுக்காத 32 சதவீத வாக்காளர்களைக் கொண்ட ‘ஸ்கார்பரோ‘ பகுதி வெற்றியாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய களமாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
