மில்டனில் வீதி விபத்து : Highway 401 இன் மேற்குநோக்கிச் செல்லும் பாதைகளுக்கு பூட்டு!

cp24

கனடாவின் மில்டன் (Milton) பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தைத் தொடர்ந்து, ஹைவே 401 (Highway 401) இன் மேற்குநோக்கிச் செல்லும் பாதைகள் மூடப்பட்டுள்ளன.

ஒன்டாரியோ மாகாண பொலிஸாரின் (Ontario Provincial Police – OPP) தகவல்படி, ரீஜனல் ரோடு 25 (Regional Road 25) மற்றும் குயெல்ஃப் லைன் (Guelph Line) ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட நெடுஞ்சாலைப் பாதைகளே இவ்வாறு மூடப்பட்டுள்ளன.

இந்த விபத்தின் காரணமாக நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த வீதிப் பாதைகள் மீண்டும் எப்போது போக்குவரத்திற்காகத் திறக்கப்படும் என்பது குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Previous articleகனடிய டொலரின் மதிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது: டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு!
Next articleஅல்பெர்ட்டா பிரியும் பட்சத்தில் 13% விற்பனை வரி விதிக்கப்படலாம்: புதிய அறிக்கை எச்சரிக்கை!